×

18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டினால் அபராதம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் எச்சரிக்கை

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த, 18 வயதிற்கு குறைவான சிறுவர்கள் வாகனங்களை ஓட்ட பெற்றோர்கள், அனுமதிக்க கூடாது என பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் சரவணன் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பரமத்திவேலூர் வட்டார போக்குவரத்து எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்குவதாக தெரிய வந்துள்ளது.

 அதன் பேரில் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199 ஏ படி உரிய ஓட்டுனர் மட்டும், பழகுனர் உரிமம் பெறமால், மோட்டார் வாகனங்களை சிறுவர்கள் ஓட்டினால், அவர்களது பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு 25,000 ரூபாய் அபராதத்துடன், மூன்று வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ஓட்டி வந்த வாகனம் 12 மாதங்களுக்கு (பர்மிட்) ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.  எனவே சிறுவர்கள், வாகனத்தை ஓட்டாமல் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் ஓட்டுநர் உரிமம், இல்லாதவர்கள் வாகனங்களை இயக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கனமழை பெய்ய வாய்ப்பு